"கல்லு கட்டை சாணி மண்ணு காராயந்தூர செம்பில்
கொல்லன் வார்த்துரு வமைத்த கோயினுட் சிலைகளை
மல்லுகட்டாய்க் கட்டி மகோத்சவம் செய்த போதினும்
இல்லையே கதிபெறவும் ஏமனுப் பிணங்களே "
"திருத்தலம் திருப்பணி திருவிழாவும் செய்திட
ஒருத்தர் நற்கதி பெறவும் உள்ளதோ சொல்லெங்கினும்
வருத்தமின்றி ஏழைகட்கு மாதுலர் பரங்கட்கும்
பெருத்தவன் அன்னதானம் செய்யப் பேருலகை அடைவாரே".
தாங்களின் பதிவு செய்த பாடல் மிக அற்புதம்,
ReplyDeleteஅன்னதானம் செய்யப் பேருலகை அடைவாரே- சிவவாக்கியரின் பாடல்களில் உள்ள கருத்துகளுக்கு விளக்கம் சொல்ல தேவைஇல்லை. அவரின் கருத்துகள் நேரிடையாக மக்களை சென்றடையும்.
மேற்கூறிய பாடல் பாமர மக்களுக்கு பொருந்தாது . இருப்பின் விழா காலங்களில் நம் மக்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்குவார்கள் . சித்தர்கள் கூறிய கருத்துகளை அவர்களால் சரிவர புரிந்து கொள்ள முடியாமல் ,இன்னும் சிலை வழிப்பாட்டினை தொடர்கிறார்கள். காலம் கனியும் வரை அவர்கள் அவ்வாறு தான் இருக்க வேண்டும் .
மிக்க நன்றி .