Monday, January 31, 2011

"குருவழிபாடே சிறந்த வழிபாடு"

பாடல் : 
"இறைவனை வழிபட்டார்  எண்ணிலாத் தேவர் 
 அவனை வழிபட்டங்  காமாறொன் றில்லை
 அவனை   வழிபட்டங்  காமாறு காட்டும்
 குருவை வழிபடின் கூடலும் ஆமே".

விளக்கம் :
சிவபெருமானை பல தேவர்கள் வழிபட்டனர், அப்பெருமானை மட்டும் வழிபட்டால் போதாது, அப்பெருமானை வழிபட்டுப் பலன் பெற வேண்டுமானால் குருவையும் வழிபடுதல் வேண்டும். அப்போதுதான் எல்லா நன்மைகளும் கைகூடும்.
இறைவனை வழிபட்டால் ஒரு பயனும் ஏற்படாது என்றதன் கருத்து,இறைவனால் ஒன்றும் தர இயலாது என்பதன்று.அவன் திருவருளைப் பெறுவதற்குக் குருவின் திருவருளும் வேண்டும் என்பதாம்.இதனை வற்புறுத்தவே அவ்வாறு கூறப்பட்டது.
                                         "திருமூலர்"

1 comment:

  1. நண்பா ,

    அருமையான பாடல் விளக்கத்துடன்.

    எல்லா மதங்களும் (கிறிஸ்தவ மதம்,சீக்கிய மதம், முஸ்லிம் மதம் ) இதை தான் போதிக்கிறது. மற்ற மதங்களில் உள்ள கட்டுப்பாடுகள் போல இந்து மதத்தில் எதுவும் கிடையாது. ஆகையால் தான் குருவைத்தேடி எல்லாராலும் செல்ல முடியவில்லை.

    சீவன் சிவனை அடைய யாருடைய தயவும் தேவையில்லை . ஆனால் சிவனை யாரென அறிய சித்தன் தயவு தேவை(குரு).

    குருவருளினால் ...

    என்றும்-சிவனடிமை-பாலா-சென்னை.

    ReplyDelete