Friday, February 11, 2011

"அருவருப்பு ஆன்மிகம்"

பாடல் : 
"தங்கள் தேகம் நோய் பேரின் தனை பிடரி கோயிலிற் 
பொங்கல் வைத்தும் ஆடு ,கோழி பூசை பலியை இட்டிட 
நங்க சொல்லு நலிமிகுந்து நாளும் தேய்ந்து மூஞ்சூராய் 
உங்கள் குலத் தெய்வமுங்க ளுருக்குலைப்ப துண்மையே".

"கும்பிடும் தெய்வ மெலாம் குல தெய்வமாய் சோடித்தே
நம்பி நாளும் பூசை செய்து நற்படிகள் தந்திட 
வெம்பிட வெதும்பிட மிடியதின லிடிபட 
தெம்பிட குடிகெடுக்கும் செத்த தெய்வமாகுமே".    
விளக்கம் :
உலக மக்களே , நீங்கள் நோய் வாய்ப்பட்டு விட்டால் உங்கள் ஊரில் உள்ள குல தெய்வங்களுக்கும் , வழி தெய்வங்களுக்கும் பொங்கல் வைத்து ஆடு ,கோழி, பன்றி என முப்பூசை இட்டாலும் அதனால் நோய் , பிரச்சனை ,கஷ்டம் தீராது . அதனால் இந்த உயிர்களை கொன்ற பாவம் , உங்கள் வாழ்வில் அதிகம் சிரமம், கஷ்டத்தை தரும் . மேலும் சரீரமும், வாழ்க்கையும், தேய்ந்து போகும்.
நீங்கள், கும்பிடும் தெய்வமெல்லாம் குல தெய்வம் என்று கூறி அந்த தெய்வம் தன்னை காக்கும் என்று எண்ணி, தினந்தோரும் பொங்கல் பூசை செய்து வந்த போதும் அந்த குல தெய்வம் உன் தெம்பை குறைத்து ,உன்னை வெம்ப வைத்து ,மனம் வெதும்பவைத்து உன் வாழ்வில் இடிவிழுந்தது போன்று கஷ்டம்,பிரச்சனைகளை மேலும் அதிகமாக தரும் இந்த குடியை கெடுக்கும் செத்த தெய்வம்.
இந்த வழிபாட்டு முறைகளும் ஆன்மிகம் அல்ல .இந்த முறையும் ஞானம் அடைய உதவாது 
தன்னை அறியும் பக்குவத்தையும் தராது என புரிந்துகொள்ள வேண்டும்.
                                                         "சிவ வாக்கியார்"

4 comments:

  1. அன்பு நண்பா ,

    தங்களின் விளக்கம் கண்டேன் , அதில் ஒரு சந்தேகம் தங்கள் கூறிய கருத்தில் ஒன்று "குல தெய்வம் என்பது குடியை கெடுக்கும் செத்த தெய்வம் ஆகும்"

    நம்முடைய வம்ச வழியில் உள்ள இறந்த ஆன்மாக்களைதான் குல தெய்வம் என்று கூறுகிறோம் அப்படியிருக்க எப்படி அவர்கள் நம்முடைய குடியை கெடுப்பார்கள்.

    இது தங்களின் கருத்து இல்லை என்று யாம் அறிந்தாலும் ,தங்களின் விளக்கத்தை எதிர்பார்க்கும் ஒரு சாதாராண மனிதன் .

    தமிழர் திருநாளாம் பொங்கல் அன்று அனைவரும் மூதாதையர்கள் வழிப்பாடு செய்கிறார்கள்.

    தெய்வங்களின் பெயரால் நரப்பலி இடுவதை எல்லாராரும் கண்டிக்கிறார்கள் யானும் தான். எல்லா உயிரையும் தம்முயிர் போல் கருதுபவனே சித்தன் ஆவான்.

    தங்களின் சித்தர் பணி என்றும் தொடர வாழ்த்துகள் ....

    என்றும்-சிவனடிமை-பாலா-சென்னை.

    ReplyDelete
  2. வணக்கம் நண்பா ,
    "செந்தமிழ்சேர் சித்தர் பதினெண்மர் பாதம் போற்றி"
    தங்களின் பதிவுக்கு நன்றி....
    சித்தர் பெருமான் இங்கே "கும்பிடும் தெய்வமெலாம் குல தெய்வமாய் சோடித்தே" என்று நீ கும்பிடும் தெய்வங்களை எல்லாம் குலதெய்வம் என்று எண்ணினால் வெறும் செத்த தெய்வமே என்றும் போலியான வழிப்பாட்டை உருவாக்காதே என்றும் அறிவுறுத்துகிறார்.
    (உன் முன்னோர்கள் வணங்கிய உன் வம்ச வழி குல தெய்வத்தை வணங்கு,உன் முன்னோர்களை வணங்கு,என்றும் தாய்,தந்தையரை வணங்கு) மிக்க நன்றி ...
    தங்களின் சித்தர் பணி என்றும் தொடர நெஞ்சார்ந்த வாழ்த்துகள்....
    என்றும்..நட்புடன்
    chakra....
    http://shivasiddhargal.blogspot.com

    ReplyDelete
  3. நண்பா ,

    தங்களின் கருத்து மிகவும் உண்மை. மூதாதையர்களை வழிப்பட்டால் தான் எல்லாமும் சுகமாக கிடைக்கும் .

    "எல்லாம் சித்தர்களின் தயவு என்று வாழ்க்கையை நடத்தினால் போதும்."

    http://gurumuni.blogspot.com/
    என்றும்-சிவனடிமை-பாலா-சென்னை.

    ReplyDelete
  4. This comment has been removed by the author.

    ReplyDelete