Friday, February 25, 2011

"சற்குரு அகத்தியர் துதி மற்றும் ஸ்ரீ மகாபோகர் சித்தர் தியானச்செய்யுள்"

சற்குரு 'அகத்தியர்' துதி:
கற்றைவார் சடையன் பெற்ற கற்றைவார் சடையன் நீயே!
நற்றவச் சிவனார் பெற்ற நற்றவ முனிவன் நீயே!
பெற்றவன் தமிழைப் பெற்றான் பிள்ளைநீ தமிழ் வளர்த்தாய்!
கொற்றவன் அவன் இமயம் குடமுனி பொதிகை வேந்தே!
வேந்தன் நீ என்பதால் என் வேதனை தவிர்க்க கேட்டேன்!
மாந்தர்தம் துயர் துடைத்தல் மன்னனின் கடமை அன்றோ!
பூந்தமிழ் வளர்த்த செல்வ புலவர்நற் குல முதல்வ!
சாந்தநற் குருவே நின்தாள் சரணென அடைந்தேன் காவாய்!
காவாயேல் என்னை ஈங்கு காத்திட எவருமில்லை!
நாவாயு புயலிற் சிக்கி தவித்தற்போல் தவிக்கின்றேன் நான்!
பேய் வாயினின்றும் மீட்ட பெருமானே என்றும் தாயாய் இருந்தே காப்பாய்!
தலைவைத்தேன் நினதுதாளே சரணம்!!!
                                            "ஒம் அகத்திசாய நம"
                                                   

ஸ்ரீ மகாபோகர் சித்தர் தியானச்செய்யுள்:
சிவிகை ஏந்தி,சிரம் தாழ்த்தும் சித்தர் பெருமக்களுக்கு
மூலிகை மேனியாய் பேரருள் புரியும் போகர் பெருமானே
சிவபாலனுக்கு ஜீவன் தந்த சித்த ஒளியே
நவ பாஷாணத்து நாயகனே உங்கள் நல்லருள் காக்க! காக்க!

 "ஒம் ஆம் ஊம் ஸ்ரீ மகாபோகர் சித்தர் ஸ்வாமியே போற்றி"
  

1 comment:

  1. அன்புள்ள நண்பா ,

    காவாயேல் என்னை ஈங்கு காத்திட எவருமில்லை!
    நாவாயு புயலிற் சிக்கி தவித்தற்போல் தவிக்கின்றேன் நான்!

    எம் வாழ்க்கையும் இதுப்போல் தான் . அகத்திய மாமுனியே என்றும் எங்களை காப்பாய்.

    "சத்தியமே அகத்தியம் ,அகத்தியமே சத்தியம்

    என்றும்-சிவனடிமை-பாலா-சென்னை.

    ReplyDelete