Monday, October 17, 2011

"சற்குரு அகத்தியரிடம் எனது - முறையீடு"

மருந்தறியேன் மணியறியேன் மந்திரமொன்றறியேன்
மதியறியேன் விதியறியேன் வாழ்க்கைநிலை யறியேன்.
திருந்தறியேன் திருவருளின் செயலறியேன் அறந்தான்
செய்தறியேன், மனமடங்கும் திறத்தினி லோரிடத்தே,
இருந்தறியேன் அறிந்தோரை ஏத்திடவும் அறியேன்
எந்தைபிரான் மணிமன்றம் எய்த அறிவேனோ,
இருந்த திசை சொலவறியேன் எங்கனம்நான் புகுவேன்.
யார்க்குரைப்பே னென்னசெய்வேன் ஏதுமறிந்திலனே.
                                                      "ஓம் அகத்தீசாய நம"

1 comment:

  1. அன்புள்ள நண்பா ,


    தங்களின் கூக்குரலை சற்குருநாதர் எப்போதும் கேட்டுக்கொண்டு தான் இருக்கிறார். அவரும் இயற்க்கைக்கு கட்டுப்பட்டவர் தானே அப்படி இருக்க ஏன் இப்படி முறை இடுகிறாய்.



    நீ எழுதிய இக்கவியில் எல்லாம் உனக்கு தெரிந்து இருந்தும் தெரியாதாது போல் ஏன் அவரிடம் முறை இடுகிறாய் .



    //மருந்தறியேன் மணியறியேன் மந்திரமொன்றறியேன்//

    மருந்தறியேன்-உடலுக்கா இல்லை உள்ளத்திற்க்கா ?
    மணியறியேன்-நாதமா ?
    மந்திரமொன்றறியேன்- மனதில் திறம் இல்லையோ ?

    //மதியறியேன் விதியறியேன் வாழ்க்கைநிலை யறியேன்.//
    மதியறியேன்- இப்பிறவியை இன்னும் உணரவில்லையா ?
    விதியறியேன்- இப்பிறவியை உணர்ந்தும் மாற்றுவதற்கு வழி தெரியவில்லையா ?
    வாழ்க்கை - அருமையான ஆன்மிக வாழ்க்கை உனக்கு குருநாதர் தரவில்லையா?

    //திருந்தறியேன் திருவருளின் செயலறியேன் அறந்தான் //
    திருந்தறியேன் -என்ன தவறு செய்தாய் திருந்துவதற்கு ?
    திருவருளின் செயலறியேன்- திருவருளின் அருள் இல்லையென்றால் உன்னால் எப்படி வாழ முடியும் .


    //செய்தறியேன், மனமடங்கும் திறத்தினி லோரிடத்தே,//
    அறந்தான் செய்தறியேன்,- மனமது செம்மையாக இருந்தால் போதும் ,பலர் புகழும்படி அறம் செய்து தான் வாழவேண்டும் என்ற எண்ணம் இல்லமால் இருந்தாலே போதும்.
    மனமடங்கும் திறத்தினி லோரிடத்தே இருந்தறியேன் - எல்லாரும் மனமடுங்கவதை கற்றுகொண்டால் உலகம் நன்றாக தான் இருக்கும்.

    //இருந்தறியேன் அறிந்தோரை ஏத்திடவும் அறியேன்//
    அறிந்தோரை ஏத்திடவும் அறியேன்-நாம் படி ஏறவே வழி இல்லை இருக்கும் போது நம்மால் மற்றவரை எப்படி வாழ்வில் உயர்த்திட முடியும்.

    //எந்தைபிரான் மணிமன்றம் எய்த அறிவேனோ,//
    மணிமன்றம் - கூடிய விரைவில் எய்தலாம்.
    //இருந்த திசை சொலவறியேன் எங்கனம்நான் புகுவேன்.//
    திசை சொலவறியேன் எங்கனம் - நாம் எல்லாரும் விதி விலக்கு பெற்றவர்கள் நமக்கு எல்லா திசையும் ஒரு திசை தான்.

    //யார்க்குரைப்பே னென்னசெய்வேன் ஏதுமறிந்திலனே.//

    யார்க்கும் சொல்லவேண்டும் ,எல்லாம் வினை படி தான் நடக்கும்.

    அருமையான பாடலுக்கு எனக்கு தெரிந்த விளக்கம் தான், தவறு இருப்பின் மன்னிக்கவும்.



    http://gurumuni.blogspot.com/

    என்றும்-சிவனடிமை-பாலா.

    ReplyDelete