"முக்தி கொண்டமோட்சமது மவுன தீட்சை முனையறிந்து செல்லுதற்கு வாலை காப்பு ; வெத்தி கொண்ட நந்தீசர் பாதங் காப்பு ; வேதாந்தம் மூவாயிரம் திருமூலர் பாதங் காப்பு ; அட்டமா சித்திக்கும் அகத்தியன் பாதங் காப்பு ; அன்பே உருவாக்கும் அகப்பேய் பாதங் காப்பு ; பரம கயிலாய குரு போகர் பாதங் காப்பு ; கொடுஞ் சீற்றம் மாறிட கொங்கணவர் பாதங் காப்பு; சூழி முனை சூட்சும குரு சுந்தராணந்தர் பாதங் காப்பு ; இகத்தில் கிரகம் வென்ற இடைக்காடர் பாதங் காப்பு ; வரும் வாழ்நாள் சிறந்திட வால்மீகர் பாதங் காப்பு ; மாயத்தை நீக்கிட மச்சமுனிவர் பாதங் காப்பு ; முன் கர்மம் நீக்கி ஞானம் காட்டும் முனிகமலர் பாதங் காப்பு ; காரியம் உணர்ந்து வெல்ல கருவூரார் பாதங் காப்பு ; பாவங்கள் நீங்கிட யோகம் தந்த பதஞ்சலி பாதங் காப்பு ; மனப்பாம்பை அடக்கிட பாம்பாட்டி பாதங் காப்பு ; தன்னுடல் சிறக்க செடி தந்த தன்வந்திரி பாதங் காப்பு ; காலம் அறிந்து வாழ ஞானம் தரும் காசிபர் பாதங் காப்பு ; வெட்ட வெளியை உணர்த்திட்ட கடுவெளி சித்தர் பாதங் காப்பு ; கொல்குணம் போக்கும் கோரக்கர் பாதங் காப்பு ; பரத்தை அறிந்திட ஞானம் போதித்த புலஸ்தியர் பாதங் காப்பு ; தேரா மருத்துவம் தெளிந்து உரைத்திட்ட தேரையர் பாதங் காப்பு ; வான் உலகில் மனு வாழ சிவவாக்கியர் பாதங் காப்பு ; போகத்தை துறந்திட புகழ் ஞானம் தந்த புண்ணாக்கீசர் பாதங் காப்பு ; நல் ஞான ஜோதியை நலமாய் கூறிய நற்குதம்பை பாதங் காப்பு ; அறியாமை இருள் நீக்கிய அமலன் அழுகுண்ணி பாதங் காப்பு ; பூஜா , ஞானம் புகன்றிட்ட புலிப்பாணி பாதங் காப்பு ; காலம் கடந்து வாழ கலை கூறிய காகபுஜண்டர் பாதங் காப்பு ; கர்மம் நீக்கி காலனை வென்றிட காலங்கி பாதங் காப்பு ; காப்பான கருவூரார் , போக நாதர் கருணையுள்ள அகத்தீசர் , சட்டைநாதர் மூப்பான கொங்கணரும் பிரம்ம சித்தர் முக்கியமாய் மச்சமுனி , நந்திதேவர் கோப்பான கோரக்கர் , பதஞ்சலியார் கூர்மையுள்ள இடைக்காடர் , சண்டிகேசர் வாப்பான வாதத்திற்கு ஆதியான வாசமுனி கமலமுனி காப்புதானே ".
Friday, October 29, 2010
Sunday, August 29, 2010
"அலங்கார ஆன்மீகத்திற்கு" சிவவாக்கியரின் சாட்டை அடி
"கல்லு கட்டை சாணி மண்ணு காராயந்தூர செம்பில்
கொல்லன் வார்த்துரு வமைத்த கோயினுட் சிலைகளை
மல்லுகட்டாய்க் கட்டி மகோத்சவம் செய்த போதினும்
இல்லையே கதிபெறவும் ஏமனுப் பிணங்களே "
"திருத்தலம் திருப்பணி திருவிழாவும் செய்திட
ஒருத்தர் நற்கதி பெறவும் உள்ளதோ சொல்லெங்கினும்
வருத்தமின்றி ஏழைகட்கு மாதுலர் பரங்கட்கும்
பெருத்தவன் அன்னதானம் செய்யப் பேருலகை அடைவாரே".
கொல்லன் வார்த்துரு வமைத்த கோயினுட் சிலைகளை
மல்லுகட்டாய்க் கட்டி மகோத்சவம் செய்த போதினும்
இல்லையே கதிபெறவும் ஏமனுப் பிணங்களே "
"திருத்தலம் திருப்பணி திருவிழாவும் செய்திட
ஒருத்தர் நற்கதி பெறவும் உள்ளதோ சொல்லெங்கினும்
வருத்தமின்றி ஏழைகட்கு மாதுலர் பரங்கட்கும்
பெருத்தவன் அன்னதானம் செய்யப் பேருலகை அடைவாரே".
அண்ட வெளி வணக்கம்
வான்வாழி வானையளி மாதவரும் வாழி
கோன்வாழிகுரு வாழிகுவலயத்தோர் வாழி
ஆன் வாழி அமரர் முத லிருடி சித்தர் வாழி
நான் நீயென லகற்று நாதாக்கள் வாழியவே
நன்றி: திரு.சித்தர்தாசன் சுப்ரமணியன் சுந்தர்ஜி அய்யா அவர்கள்
திரு .அகத்தியர்தாசன் கேசவமூர்த்தி அய்யா அவர்கள்
கோன்வாழிகுரு வாழிகுவலயத்தோர் வாழி
ஆன் வாழி அமரர் முத லிருடி சித்தர் வாழி
நான் நீயென லகற்று நாதாக்கள் வாழியவே
நன்றி: திரு.சித்தர்தாசன் சுப்ரமணியன் சுந்தர்ஜி அய்யா அவர்கள்
திரு .அகத்தியர்தாசன் கேசவமூர்த்தி அய்யா அவர்கள்
Subscribe to:
Posts (Atom)