Monday, October 17, 2011

"சற்குரு அகத்தியரிடம் எனது - முறையீடு"

மருந்தறியேன் மணியறியேன் மந்திரமொன்றறியேன்
மதியறியேன் விதியறியேன் வாழ்க்கைநிலை யறியேன்.
திருந்தறியேன் திருவருளின் செயலறியேன் அறந்தான்
செய்தறியேன், மனமடங்கும் திறத்தினி லோரிடத்தே,
இருந்தறியேன் அறிந்தோரை ஏத்திடவும் அறியேன்
எந்தைபிரான் மணிமன்றம் எய்த அறிவேனோ,
இருந்த திசை சொலவறியேன் எங்கனம்நான் புகுவேன்.
யார்க்குரைப்பே னென்னசெய்வேன் ஏதுமறிந்திலனே.
                                                      "ஓம் அகத்தீசாய நம"

Friday, October 14, 2011

கடவுள் வடிவம் ; கடவுள் இருப்பிடம் ; சீவன் இருப்பிடம்:

கடவுள் வடிவம்:
உயிர்க்கு உயிராம் ஒளி, சோதி, வடிவமே கடவுள் வடிவம், புறத்தில் திருவிளக்கின் பிரகாசம் ,
அகத்தில் (அனுபவத்தில்) அருட்சோதி வடிவம்.

கடவுள் இருப்பிடம்:
பார்க்குமிடம் எங்கும் நீக்கமற நிறைந்திருக்கின்ற கடவுள், நம்மிலும் இயற்கை உண்மைக் கடவுள் காரணத்தாலுள்ள இடம் (பொற்சபை) உச்சி.

சீவன் இருப்பிடம்:
ஆன்மா சிற்றணு வடிவினன். இருப்பிடம் புருவ மையம்.
ஆகவே புருவ மையமாகிய சிற்சபையிலிருந்து
பொற்சபையாகிய உச்சியில் ஆண்டவரை தியானித்தல்.
ஆண்டவர் அருளைப் பெறுவதற்கு உண்மையான இடம்
மெய்யகம்.
 "ஓம் ஸ்ரீ வள்ளலார் சித்தர் சுவாமியே போற்றி"

Tuesday, May 3, 2011

பசியின் கொடுமையை பற்றிய "ஸ்ரீ வள்ளலார் சித்தர் சுவாமிகளின் - கூற்று"

"ஜீவர்களுக்கு பசி அதிகரித்த காலத்தில்"
ஜீவ அறிவு விளக்கமில்லாமல் மயங்குகின்றது-
அது மயங்கவே அறிவுக்கறிவாகிய கடவுள் விளக்கம்
மறைபடுகின்றது - அது மறையவே புருடதத்துவம்
சோர்ந்துவிடுகிறது. அது சோரவே பிரகிருதி தத்துவம்
மழுங்குகின்றது - அது மழுங்கவே குணங்களெல்லாம்
பேதப்படுகின்றன. மனம் தடுமாறிச் சிதறுகின்றது - புத்தி
கெடுகின்றது- சித்தம் கலங்குகின்றது - அகங்காரம் 
அழிகின்றது - பிராணன் சுழல்கின்றது -
பூதங்களெல்லாம்புழங்குகின்றன -வாதபித்த சிலேட்டுமங்கள் நிலை மாறுகின்றது
கண் பஞ்சடைந்து குழிந்து போகின்றது , காது
கும்மென்று செவிபடுகின்றது - நா உலர்ந்து வரளுகின்றது-
நாசி குழைந்து அழல்கின்றது தோல் மெலிந்து
ஸ்மரணை கெடுகின்றது -கை கால் சோர்ந்து 
துவளுகின்றன - மல சல வழி வெதும்புகின்றது,-
மேனி கருக்கின்றது ரோமம் வெறிக்கின்றது - நரம்புகள் குழைந்து நைகின்றன-
நாடிகள் கட்டுவிட்டுக் குழைகின்றன - எலும்புகள்
கருகிப் பூட்டுகள்  நெக்குவிடுகின்றன - இருதயம் வேகின்றது -
மூளை சுருங்குகின்றது - சுக்கிலம் மாமிசம் குழைந்து
தன்மை கெடுகின்றது - வயிறு  பகீரென்று எரிகின்றது .
தாப கோபங்கள் மேன்மேலும் உண்டாகின்றன.உயிரிழந்து
விடுவதற்கு மிகவும்சமீபத்த அடையாளங்களும்
அனுபவங்களும் மேன்மேலும் தோன்றுகின்றன.
பசியினால் இவ்வளவு அவத்தைகளுந் தோன்றுவது
ஜீவர்களுக்கெல்லாம் பொதுவாகவே இருக்கின்றது.
இவ்வளவு அவத்தைகளும் -ஆகாரம் கிடைத்தபோது
உண்டு - பசிநீங்க நீங்குகின்றன.  அப்பொழுது
தத்துவங்களெல்லாம் தளைத்தது -உள்ளம் குளிர்ந்து,
அறிவு விளங்கி , அகத்திலும் முகத்திலும்
ஜீவகளையும் கடவுள் களையுந்துளம்பி ஒப்பில்லாத
திருப்தி இன்பம் உண்டாகின்றன. இப்படிப்பட்ட
இன்பத்தை உண்டு பண்ணுகின்ற புண்ணியத்துக்கு
எந்த புண்ணியத்தை இணையென்று சொல்லலாம்? 
எல்லாத் தெய்வங்களுக்கும்மேலாகிய கடவுள் 
அம்சமென்றே சத்தியமாக அறியவேண்டும். இதனால்-
ரகவேதனை, சனனவேதனை, மரணவேதனை 
என்கின்ற மூன்று வேதனைகளுள் கூடி முடிந்த
வேதனையே பசிவேதனை என்றும் ;
அகம், புறம், நடு, கீழ், மேல், பக்கம் என்கின்ற
எவ்விடத்தும் நிறைந்து எக்காலத்தும் வேறுபடாத
மோட்ச இன்பமே ஆகாரத்தினால் உண்டாகும் திருப்தி
இன்பம் என்றும் அறியப்படும்.
             "ஓம் ஸ்ரீ வள்ளலார் சித்தர் சுவாமியே போற்றி"

Sunday, March 27, 2011

"இருள்சேர் இருவினையும் சேரா இறைவன் பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு"

திருக்குறள்:
"இருள்சேர் இருவினையும் சேரா இறைவன் 
 பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு"

தமிழ்விளக்கம்:
இறைவன் என்பதற்குரிய பொருளைப் புரிந்து கொண்டு புகழ்
பெற விரும்புகிறவரர்கள், நன்மை தீமைகளை ஒரே அளவில் 
எதிர் கொள்வார்கள்.
     
English meaning:
God's praise who tell, are free from right
And wrong, the twins of dreaming night.

"ஓம்  ஸ்ரீ திருவள்ளுவர் சித்தர் பெருமானே போற்றி"

Saturday, March 26, 2011

"வேண்டுதல்வேண் டாமை இலானடி சேர்ந்தார்க்கு யாண்டும் இடும்பை இல"

திருக்குறள்:
"வேண்டுதல்வேண் டாமை இலானடி சேர்ந்தார்க்கு
  யாண்டும் இடும்பை இல"

தமிழ்விளக்கம்:
விருப்பு வெறுப்பற்றுத் தன்னலமின்றித் திகழ்கின்றவரைப்
பின்பற்றி நடப்பவர்களுக்கு எப்போதுமே
துன்பம் ஏற்படுவதில்லை.

English meaning:
Who hold His feet who likes nor loathes
Are free from woes of human births.

     "ஓம்  ஸ்ரீ திருவள்ளுவர் சித்தர் பெருமானே போற்றி"  

Thursday, March 24, 2011

"கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன் நற்றாள் தொழாஅர் எனின்"

திருக்குறள் :
"கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
 நற்றாள் தொழாஅர் எனின்".

தமிழ்விளக்கம் :
தன்னைவிட அறிவில் மூத்த பெருந்தகையாளரின் முன்னே
வணங்கி நிற்கும் பண்பு இல்லாவிடில் என்னதான் ஒருவர்
கற்றிருந்தாலும் அதனால் என்ன பயன்? ஒன்றுமில்லை.

English meaning:
That lore is vain which does not fall
At His good feet who knoweth all.

                 "ஓம்  ஸ்ரீ திருவள்ளுவர் சித்தர் பெருமானே போற்றி"

Wednesday, March 23, 2011

"ஸ்ரீ ஷிர்டி சாய் பாபா சித்தர் தியானச்செய்யுள்"

ஸ்ரீ ஷிர்டி சாய் பாபா சித்தர் தியானச்செய்யுள்:
சாயி நாதர் திருவடியே! 
சங்கடம் தீர்க்கும் திருவடியே! 
நேயம் மிகுந்த திருவடியே! 
நினைத்தளிக்கும் திருவடியே! 
தெய்வ பாபா திருவடியே! 
தீவினை தீர்க்கும் திருவடியே!
உயர்வை அளிக்கும் திருவடியே போற்றி!.

                            "ஓம் சாயி ஸ்ரீ சாயி ஜெய ஜெய சாயி"