"பெண்ணாகி வந்து ஒரு மாயப்
பிசாசம் பிடித்திட்டென்னைக்
கண்ணால் வெருட்டி முலையால்
மயக்கிக் கடிதடத்துப்
புண்ணாம் குழியிடைத் தள்ளி என்
போதப் பொருள் பறிக்க
எண்ணாது உனைமறந் தேனிறை
வாகச்சி ஏகம்பனே".
----------------------------------------------------------------
"நாறும் குறுதிச் சலதாரை
தோல் புரைநாள் தொறும்சீ
ஊறும் மலக்குழி காமத்
துவாரம் ஒளித்திடும்புண்
தேறும் தசைப்பிளப்பு அந்தரங்
கத்துள் சிற்றின்பம் விட்டு
ஏறும் பதந்தரு வாய்திருக்
காளத்தி ஈச்சுரனே" .
----------------------------------------------------------------------
"எத்தனைபேர் நட்டகுழி எத்தனைபேர் தொட்ட முலை
எத்தனைபேர் பற்றி இழுத்த இதழ் -நித்தம் நித்தம்
பொய்யடா பேசும் புவியின்மட மாதரைவிட்டு
உய்யடா உய்யடா உய்".------------------------------------ஞான பிதா (பட்டினத்தார் )
No comments:
Post a Comment