அணுக்ககளை மோதச்செய்து செயற்கைப் பிரளயத்தை உருவாக்கி, அதன் மூலம் பிரபஞ்சம் உருவாக்கத்துக்கு புதியவிடை கண்டுபிடிக்கும் முயற்சியே Large Hadron Collider - LHC எனப்படும் 'மகா செயற்கைப் பிரளயம்'.
இலட்சக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு, அண்டவெளியில் நட்சத்திரங்கள் வெடித்து சிதறி அணுப்பொருள் தோன்றியதாகவும் , பின்னர் அவை ஒன்றோடு ஒன்று இணைந்து கிரகங்களும், பின்னர் அதில் உயிரினங்களும் தோன்றியதாகவும் விஞ்ஞானிகள் கருதுகின்றனர் . அண்டவெளியில் இவ்வாறு நட்சத்திரங்கள் மோதிய சம்பவத்தை 'பிரளயம்' என்று வர்ணிக்கின்றனர்.
இந்த பிரளயத்தின் போது முதலில் அணுப்பொருட்கள் தோன்றின என்றாலும் அந்த அணுப் பொருட்கள் ஒன்றோடு ஒன்றாக இணைந்து திடப் பொருளாக உருவானது எப்படி? திடப்பொருள் உருவாகக் காரணமான அணுக்களை இணக்கச் செய்யும் பொருள் என்ன என்பது எவருக்கும் புரியாத புதிராகவே இருக்கிறது.அணுக்களை இணைக்கசெய்யும்அந்த மர்ம பொருளுக்கு 'கடவுள்' பொருள் என்று 1964 ல் பீட்டர் ஹிக்ஸ் என்ற விஞ்ஞானி பெயர் சூட்டினார்.
பிரபஞ்சத்தில் இருக்கும் அனைத்து திட மற்றும் திரவ பொருட்களும் உருவாகக் காரணமான இந்த கடவுள் பொருளை கண்டுபிடிக்கும் சோதனை 2008 , செப்டம்பர் 10 ஆம் தேதி சுவிட்சர்லாந்தில் துவங்கின. என்றாலும் பல தொழில் நுட்ப காரணங்களால் துவங்கிய ஒன்பது நாட்களுக்குள்ளேயே இந்த சோதனைகள் நிறுத்தப்பட்டன.
பழுது பார்ப்பு மற்றும் பல்வேறு மாற்றங்களுக்கு பின் 2009 ல் இத்திட்டம் மீண்டும் செயல்பட துவங்கியது . இத்திட்டத்தின் மொத்த மதீப்பீட்டுச் செலவு 9.2 பில்லியன் டாலர்கள். இதற்கான முறையான பணிகள் கடந்த 1994 ஆம் ஆண்டில் 'செர்ன்' என்ற ஐரோப்பிய ஆராய்ச்சி நிலையத்தில் துவங்கியது .
சோதனைக்கான பிரான்ஸ்-சுவிட்சர்லாந்து எலைப்பகுதியில் ஜெனீவா அருகே ஒரு ஆய்வு மையம் அமைக்கப்பட்டது .27 கி.மீ .நீளம் கொண்ட நீள்வட்ட வடிவிலான இந்த மையம் குழாய் வடிவிலானது. இதற்குள்தான் அணுக்களை மோதச் செய்து செயற்கை பிரளயம் ஏற்படுத்தப்படுகிறது . குழாய் அமைப்பின் இரு முனைகளிலும் பெரிய தூண் வடிவில் புரோட்டான்கள் நிறுவப்பட்டன. டன் கணக்கிலான எடை கொண்ட இந்த இரண்டு தூண்களும் எதிர் எதிராக கடிகாரச்சுற்றில் சுற்றிவந்து மோதும் . மணிக்கு 1600 கி.மீ . வேகத்தில் இந்த தூண்கள் மோதும் போது அது மிகப்பெரிய அளவிலான அணுகுண்டு சோதனை போல் இருக்கும்.
"மெய்ஞானமே எல்லா ஞானங்களுக்கும் முதன்மையானது; மெய்ஞானத்தில் நான்கில் ஒரு பாகமே விஞ்ஞானம்".
Hi Chakra,
ReplyDeleteVery useful information abt 'PRALAYAM'.
please continue this kind of services to us.
Thanks, N.Balasubramanian