Wednesday, February 23, 2011

"அறிதலே அறிவு"

"பட்டினத்தார்"
"என்னை யறியா லெனக்குள்ளே நீயிருக்க
உன்னை யறியாமல் உடலழிந்தேன் பூரணமே
வானென்பார் அண்டமென்பார் வாய் ஞானமே பேசி
தானென்பார் வீணர் தனையறியார் பூரணமே
ஒன்றாய் யுயிராய் உடல் தோறும் நீயிருந்தும்
என்று மறியார்களே ழைகள் தாம் பூரணமே 
நகார மகாராமென்பார் நடுவே சிகாரமென்பார்
வகார யகாரமென்பார் வகையறியார் பூரணமே 
வாசிதனைப் பார்த்து மகிழ்ந்த்துணைத்தான் போற்றாமல் 
காசிவரை போய் திரிந்து காலலுத்தேன் பூரணமே 
உடலுக்குள் நீ நின்றுலாவினதைக் காணாமல்
கடல் மலைதோறும்திரிந்து காலலுத்தேன் பூரணமே".

 "சிவ வாக்கியார்"
"நட்டு வைத்த தேவரும் பொய் நான் மறை களாணதும் பொய் 
கட்டிவைத்த புத்தக கதைகளும் பொய் புராணமும் பொய் 
எட்டு திக்கு தேவரும்போய் ஏழிரண்டு லோகமும் பொய் 
மட்டில்லாத ஜோதினம் மனத்துள்ளே விளங்குமே"

"அகத்தில் உள்ள ஆன்ம ஜோதியை அறிதலே-ஆன்ம அறிவு" 

2 comments:

  1. அன்புள்ள நண்பா ,

    தங்களின் பதிவு மிக அருமை.

    இதனை காணும்போது எனக்கு பாம்பாட்டி சித்தரின் பாடல் ஒன்று ஞாபகம் வருகிறது.

    காடுமலை நதிபதி காசி முதலாய்ச்
    கால்கடுக்க ஓடிப்பலன் காணலாகுமோ
    வீடுபெறும் வழிநிலை மேவிக்கொள்ளவே
    வேதாந்தத் துறையினின் றாடாய் பாம்பே .


    சதுர்வேதம் ஆறுவகை சாஸ்திரம்பல
    தந்திரம் புராணங்கலை சாற்று மாகமம்
    விதம்வித மானவான வேறு நூல்களும்
    வீணான நூல்களேயென் றாடாய் பாம்பே..

    என்றும்-சிவனடிமை-பாலா-சென்னை.

    ReplyDelete
  2. Kalakkunga Chakkara...

    Neenga ennikkumey ''Chakkara -- Inikkira Chakkara ''

    ReplyDelete