Sunday, March 27, 2011

"இருள்சேர் இருவினையும் சேரா இறைவன் பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு"

திருக்குறள்:
"இருள்சேர் இருவினையும் சேரா இறைவன் 
 பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு"

தமிழ்விளக்கம்:
இறைவன் என்பதற்குரிய பொருளைப் புரிந்து கொண்டு புகழ்
பெற விரும்புகிறவரர்கள், நன்மை தீமைகளை ஒரே அளவில் 
எதிர் கொள்வார்கள்.
     
English meaning:
God's praise who tell, are free from right
And wrong, the twins of dreaming night.

"ஓம்  ஸ்ரீ திருவள்ளுவர் சித்தர் பெருமானே போற்றி"

Saturday, March 26, 2011

"வேண்டுதல்வேண் டாமை இலானடி சேர்ந்தார்க்கு யாண்டும் இடும்பை இல"

திருக்குறள்:
"வேண்டுதல்வேண் டாமை இலானடி சேர்ந்தார்க்கு
  யாண்டும் இடும்பை இல"

தமிழ்விளக்கம்:
விருப்பு வெறுப்பற்றுத் தன்னலமின்றித் திகழ்கின்றவரைப்
பின்பற்றி நடப்பவர்களுக்கு எப்போதுமே
துன்பம் ஏற்படுவதில்லை.

English meaning:
Who hold His feet who likes nor loathes
Are free from woes of human births.

     "ஓம்  ஸ்ரீ திருவள்ளுவர் சித்தர் பெருமானே போற்றி"  

Thursday, March 24, 2011

"கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன் நற்றாள் தொழாஅர் எனின்"

திருக்குறள் :
"கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
 நற்றாள் தொழாஅர் எனின்".

தமிழ்விளக்கம் :
தன்னைவிட அறிவில் மூத்த பெருந்தகையாளரின் முன்னே
வணங்கி நிற்கும் பண்பு இல்லாவிடில் என்னதான் ஒருவர்
கற்றிருந்தாலும் அதனால் என்ன பயன்? ஒன்றுமில்லை.

English meaning:
That lore is vain which does not fall
At His good feet who knoweth all.

                 "ஓம்  ஸ்ரீ திருவள்ளுவர் சித்தர் பெருமானே போற்றி"

Wednesday, March 23, 2011

"ஸ்ரீ ஷிர்டி சாய் பாபா சித்தர் தியானச்செய்யுள்"

ஸ்ரீ ஷிர்டி சாய் பாபா சித்தர் தியானச்செய்யுள்:
சாயி நாதர் திருவடியே! 
சங்கடம் தீர்க்கும் திருவடியே! 
நேயம் மிகுந்த திருவடியே! 
நினைத்தளிக்கும் திருவடியே! 
தெய்வ பாபா திருவடியே! 
தீவினை தீர்க்கும் திருவடியே!
உயர்வை அளிக்கும் திருவடியே போற்றி!.

                            "ஓம் சாயி ஸ்ரீ சாயி ஜெய ஜெய சாயி"   

Tuesday, March 22, 2011

"ஸ்ரீ பாம்பாட்டிச் சித்தர் தியானச்செய்யுள்"

ஸ்ரீ பாம்பாட்டிச் சித்தர் தியானச்செய்யுள்:
அடவி வாழ் பாம்புகளை ஆட்டுவித்து பின்
உடலில் வாழ் பாம்புதனை எழுப்புவித்து
கூடுவிட்டு கூடு பாய்ந்து ஞானமுத்து
கொடுத்தவரே குவலயத்தின் காவலரே!
ஆதிசேசனின் அருள் கண்டு
ஆதிசிவன் மகன் வரம் கொண்டு
ஜாதி மதங்கள் பேதம் இன்றி
காக்கும் சித்தரே காக்க! காக்க!

             "ஓம் வசி ஸ்ரீ பாம்பாட்டி சித்தர் சுவாமியே போற்றி"

Monday, March 21, 2011

"ஸ்ரீ கருவூர் சித்தர் தியானச்செய்யுள்"

ஸ்ரீ கருவூர் சித்தர் தியானச்செய்யுள்: கருவூரில் அவதரித்த மகாஸ்தபதியே திருக்
கலைத்தேரில் முடிதரித்த நவநிதியே
வாரி வழங்கி அருள் கொடுத்தாய்
காறி உமிழ்ந்தும் துயர் எடுத்தாய்
கல் உள்ளளவும் மண் உள்ளளவும் உன்
கருணைக்கரங்களே காப்பு! காப்பு!

      "ஓம் கம் நம் ஸ்ரீ கருவூரார் சித்தர் சுவாமியே போற்றி"

Sunday, March 20, 2011

"ஸ்ரீ கஞ்சமலை சித்தர் தியானச்செய்யுள்"

ஸ்ரீ கஞ்சமலை சித்தர் தியானச்செய்யுள்:
அப்பா என்று அடிதுவங்கி 
அழைத்தவருக்கு தப்பாமல் அருள்தரும்
தெய்வ சிகாமணியே
எப்பாவமும் புரியாமல் உங்கள்
திருப்பாதம் பற்றினோம்
அஞ்சேல் என்று அபயம் அளிப்பாய் கஞ்சமலை
சுவாமியே!.

       "ஓம் க்லம் ஸ்ரீ கஞ்சமலை சித்தர் சுவாமியே போற்றி"

"ஸ்ரீ கடுவெளி சித்தர் தியானச்செய்யுள்"

ஸ்ரீ கடுவெளி சித்தர் தியானச்செய்யுள்:
சுடும் வெய்யிலில் கடுவெளியில் 
ஏனிந்த வாழ்க்கை என ஏகாந்தமாய்
எக்களித்த சடைமுடி சுவாமியே 
விடைதெரியா பாதையில் 
வீறாப்பாய் நடைபோடும்
எம்மை கைப்பிடித்து கரைசேர்ப்பாய்
கடுவெளி நாதரே!.

"ஒம் லபம் ருணம் நஸீம் ஸ்ரீ கடுவெளி சித்தர் சுவாமியே போற்றி"

Thursday, March 17, 2011

"ஸ்ரீ பட்டினத்தார் சித்தர் தியானச்செய்யுள்"

ஸ்ரீ பட்டினத்தார் சித்தர் தியானச்செய்யுள்:
சந்திர விழியும் மந்திர மொழியும் கொண்ட சிவபக்தரே 
கரும்பு வில்லும் அரும்பு சொல்லுமாய் ஆண்டவனிடம் 
கலந்தவரே பற்றற்று, உற்றற்று,சுற்றற்று
ஈசன் கால்பற்றி இருக்கும் உங்கள் பாதம் பற்றினோம் 
பரிவுடன் காப்பீர் பட்டினத்தாரே!.

   "ஓம் ஸ்ரீ பட்டினத்தடிகளார் சித்தர் சுவாமியே போற்றி"    

Wednesday, March 16, 2011

"ஸ்ரீ இடைக்காடர் சித்தர் தியானச்செய்யுள்"

  ஸ்ரீ இடைக்காடர் சித்தர் தியானச்செய்யுள்:
ஆயனராய் அவதரித்து ஆண்டியாய் உருத்தரித்து
அபலைகளுக்கருளிய கோணார் பெருமானே!
ஓடுகின்ற கிரகங்களை கோடு போட்டு படுக்க வைத்த 
பரந்தாமனின் அவதாரமே ! மண் சிறக்க விண் சிறக்க 
கடைக்கண் திறந்து காப்பீர் இடைக்காடர் சுவாமியே!.

            "ஓம் ஸ்ரீ இடைக்காடர் சித்தர் சுவாமியே போற்றி"

Tuesday, March 15, 2011

"ஸ்ரீ வள்ளலார் சித்தர் சுவாமிகள் தியானச்செய்யுள்"

ஸ்ரீ வள்ளலார் சித்தர் சுவாமிகள் தியானச்செய்யுள்:
மென்மையே கருவாகி உண்மையே உருவாகி
வெண்மையே உடையாகி 
ஈமையில் இறைமை கண்டவரே 
நீரில் ஒளி ஏற்றிய நிர்மலனே
சிவசோதியில் கலந்த பரஞ்சோதியே
வழி தேடி அலையும் எமக்கு ஒளிகாட்டுவாய் மெய் ஞான சோதியே!.

                    "ஓம் ஸ்ரீ வள்ளலார் சித்தர் சுவாமியே போற்றி"

Sunday, March 13, 2011

"பிரபஞ்ச மர்மத்தை தேடும் நவீன அறிவியல் ஆய்வு"

அணுக்ககளை மோதச்செய்து செயற்கைப் பிரளயத்தை உருவாக்கி, அதன் மூலம் பிரபஞ்சம் உருவாக்கத்துக்கு புதியவிடை கண்டுபிடிக்கும் முயற்சியே Large Hadron Collider - LHC எனப்படும் 'மகா செயற்கைப் பிரளயம்'.
இலட்சக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு, அண்டவெளியில் நட்சத்திரங்கள் வெடித்து சிதறி அணுப்பொருள் தோன்றியதாகவும் பின்னர் அவை ஒன்றோடு ஒன்று இணைந்து கிரகங்களும், பின்னர் அதில் உயிரினங்களும் தோன்றியதாகவும் விஞ்ஞானிகள் கருதுகின்றனர் . அண்டவெளியில் இவ்வாறு நட்சத்திரங்கள் மோதிய சம்பவத்தை 'பிரளயம்' என்று வர்ணிக்கின்றனர்.
இந்த பிரளயத்தின் போது முதலில் அணுப்பொருட்கள் தோன்றின என்றாலும் அந்த அணுப் பொருட்கள் ஒன்றோடு ஒன்றாக இணைந்து திடப் பொருளாக உருவானது எப்படி? திடப்பொருள் உருவாகக் காரணமான அணுக்களை இணக்கச் செய்யும் பொருள் என்ன என்பது எவருக்கும் புரியாத புதிராகவே இருக்கிறது.அணுக்களை இணைக்கசெய்யும்அந்த மர்ம பொருளுக்கு 'கடவுள்' பொருள் என்று 1964 ல் பீட்டர் ஹிக்ஸ் என்ற விஞ்ஞானி பெயர் சூட்டினார்.
பிரபஞ்சத்தில் இருக்கும் அனைத்து திட மற்றும் திரவ பொருட்களும் உருவாகக் காரணமான இந்த கடவுள் பொருளை கண்டுபிடிக்கும் சோதனை 2008 , செப்டம்பர் 10 ஆம் தேதி  சுவிட்சர்லாந்தில் துவங்கின. என்றாலும் பல தொழில் நுட்ப காரணங்களால் துவங்கிய ஒன்பது நாட்களுக்குள்ளேயே இந்த சோதனைகள் நிறுத்தப்பட்டன.
பழுது பார்ப்பு மற்றும் பல்வேறு மாற்றங்களுக்கு பின் 2009 ல் இத்திட்டம் மீண்டும் செயல்பட துவங்கியது . இத்திட்டத்தின் மொத்த மதீப்பீட்டுச் செலவு 9.2 பில்லியன் டாலர்கள். இதற்கான முறையான பணிகள் கடந்த 1994 ஆம் ஆண்டில் 'செர்ன்' என்ற ஐரோப்பிய ஆராய்ச்சி நிலையத்தில் துவங்கியது .
சோதனைக்கான பிரான்ஸ்-சுவிட்சர்லாந்து எலைப்பகுதியில் ஜெனீவா அருகே ஒரு ஆய்வு மையம் அமைக்கப்பட்டது .27 கி.மீ .நீளம் கொண்ட நீள்வட்ட வடிவிலான இந்த மையம் குழாய் வடிவிலானது. இதற்குள்தான் அணுக்களை மோதச் செய்து செயற்கை பிரளயம் ஏற்படுத்தப்படுகிறது . குழாய் அமைப்பின் இரு முனைகளிலும் பெரிய தூண் வடிவில் புரோட்டான்கள் நிறுவப்பட்டன. டன் கணக்கிலான எடை கொண்ட இந்த இரண்டு தூண்களும் எதிர் எதிராக கடிகாரச்சுற்றில் சுற்றிவந்து மோதும் . மணிக்கு 1600 கி.மீ . வேகத்தில் இந்த தூண்கள் மோதும் போது அது மிகப்பெரிய அளவிலான அணுகுண்டு சோதனை போல் இருக்கும்

 "மெய்ஞானமே எல்லா ஞானங்களுக்கும் முதன்மையானது;      மெய்ஞானத்தில்  நான்கில் ஒரு பாகமே விஞ்ஞானம்".  

Friday, March 11, 2011

"ஸ்ரீ காக புஜண்டர் சித்தர் தியானச்செய்யுள்"

ஸ்ரீ காக புஜண்டர் சித்தர் தியானச்செய்யுள்:
காலச் சக்கரம் மேல் ஞானச்சக்கரம் ஏந்திய
மகா ஞானியே யுகங்களைக் கணங்களாக்கி கவனித்திடும்
காக்கை சுவாமியே மும்மூர்த்திகள் போற்றும்
புஜண்டரே உமது கால் பற்றிய எம்மைக் காப்பாய்
காகபுஜண்ட சுவாமியே!.

"ஓம் ஸ்ரீம் ஹ்ரீம்,லம், நமஹ ஸ்வம் ஸ்ரீ காகபுஜண்டர் சித்தர் சுவாமியே போற்றி"

Thursday, March 10, 2011

"அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு"

திருக்குறள் :
"அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
 பகவன் முதற்றே உலகு".
தமிழ் விளக்கம் :      அகரம் எழுத்துகளுக்கு முதன்மை ; ஆதிபகவன் , உலகில் வாழும் உயிர்களுக்கு முதன்மை.
English meaning :
'A' leads letters; the Ancient Lord Leads and lords the EntireWorld.
             "ஓம்  ஸ்ரீ திருவள்ளுவர் சித்தர் பெருமானே போற்றி"

Wednesday, March 9, 2011

"ஸ்ரீ சிவவாக்கிய சித்தர் தியானச்செய்யுள்"

ஸ்ரீ சிவவாக்கிய சித்தர் தியானச்செய்யுள்:
சிவனில் சிந்தை வைத்து சீவனில் சித்து வைத்து
அவனியைக் காக்க வந்த அழகர் பெருமானே.....
அபாயம் நீக்கி சிவாயம் காட்டும்
தங்கள் தாமரைத் திருவடிக் காப்பு!.

                    "ஓம் ஸ்ரீ சிவவாக்கிய சித்தர் பெருமானே போற்றி"