Monday, October 17, 2011

"சற்குரு அகத்தியரிடம் எனது - முறையீடு"

மருந்தறியேன் மணியறியேன் மந்திரமொன்றறியேன்
மதியறியேன் விதியறியேன் வாழ்க்கைநிலை யறியேன்.
திருந்தறியேன் திருவருளின் செயலறியேன் அறந்தான்
செய்தறியேன், மனமடங்கும் திறத்தினி லோரிடத்தே,
இருந்தறியேன் அறிந்தோரை ஏத்திடவும் அறியேன்
எந்தைபிரான் மணிமன்றம் எய்த அறிவேனோ,
இருந்த திசை சொலவறியேன் எங்கனம்நான் புகுவேன்.
யார்க்குரைப்பே னென்னசெய்வேன் ஏதுமறிந்திலனே.
                                                      "ஓம் அகத்தீசாய நம"

Friday, October 14, 2011

கடவுள் வடிவம் ; கடவுள் இருப்பிடம் ; சீவன் இருப்பிடம்:

கடவுள் வடிவம்:
உயிர்க்கு உயிராம் ஒளி, சோதி, வடிவமே கடவுள் வடிவம், புறத்தில் திருவிளக்கின் பிரகாசம் ,
அகத்தில் (அனுபவத்தில்) அருட்சோதி வடிவம்.

கடவுள் இருப்பிடம்:
பார்க்குமிடம் எங்கும் நீக்கமற நிறைந்திருக்கின்ற கடவுள், நம்மிலும் இயற்கை உண்மைக் கடவுள் காரணத்தாலுள்ள இடம் (பொற்சபை) உச்சி.

சீவன் இருப்பிடம்:
ஆன்மா சிற்றணு வடிவினன். இருப்பிடம் புருவ மையம்.
ஆகவே புருவ மையமாகிய சிற்சபையிலிருந்து
பொற்சபையாகிய உச்சியில் ஆண்டவரை தியானித்தல்.
ஆண்டவர் அருளைப் பெறுவதற்கு உண்மையான இடம்
மெய்யகம்.
 "ஓம் ஸ்ரீ வள்ளலார் சித்தர் சுவாமியே போற்றி"