Tuesday, November 2, 2010

பெண் மோக பித்தர்களுக்கு ......

"பெண்ணாகி வந்து ஒரு மாயப்
   பிசாசம் பிடித்திட்டென்னைக் 
கண்ணால் வெருட்டி முலையால் 
   மயக்கிக் கடிதடத்துப் 
புண்ணாம் குழியிடைத் தள்ளி என்
   போதப் பொருள் பறிக்க 
எண்ணாது உனைமறந் தேனிறை
   வாகச்சி ஏகம்பனே".  
----------------------------------------------------------------
  "நாறும் குறுதிச் சலதாரை 
        தோல் புரைநாள்  தொறும்சீ
ஊறும் மலக்குழி காமத் 
     துவாரம் ஒளித்திடும்புண் 
தேறும் தசைப்பிளப்பு அந்தரங்
     கத்துள் சிற்றின்பம் விட்டு 
ஏறும் பதந்தரு வாய்திருக் 
   காளத்தி ஈச்சுரனே" .
----------------------------------------------------------------------
"எத்தனைபேர் நட்டகுழி எத்தனைபேர் தொட்ட முலை
எத்தனைபேர் பற்றி இழுத்த இதழ் -நித்தம் நித்தம்  
பொய்யடா பேசும் புவியின்மட மாதரைவிட்டு 
உய்யடா உய்யடா உய்".------------------------------------ஞான பிதா (பட்டினத்தார் )

Monday, November 1, 2010

இருப்பது பொய் போவது மெய்..

"இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே
ஒருத்தருக்கும் தீங்கினையுன் னாதே - பருத்ததொந்தி
நம்மது என்று நாம் இருப்ப நாய்நரிகள் பேய் கழுகு
தம்மது என்று தாம் இருக்கும் தான்".
                                          ஞான பிதா (பட்டினத்தார் ).

மீண்டும் பிறவி வேண்டாம் நமசிவாயமே ..

"மாதா உடல்சலித்ததாள் வல்வினையேன் கால் சலித்தேன்
வேதாவும் கைசலித்து விட்டானே - நாதா 
இருப்பையூர் வாழ்சிவனே இன்னமோர் அன்னை 
கருப்பையூர் வாராமல் கா". 
                              ஞான பிதா (பட்டினத்தார் ).

ஞான பிதா (பட்டினத்தாரின் ) சிவ சரணாகதி ....

"என் செயல் ஆவதி யாதொன்றும் மில்லை இனித்தெய்வமே
     உன் செயலே என்று உணரப்பெற்றேன் இந்த ஊன் எடுத்த 
பின் செய்த தீவினை யாதொன்றும் மில்லைப் பிறப்பதற்கு 
    முன்செய்த தீவினை யோஇங்ங னேவந்து மூண்டதுவே". 

Friday, October 29, 2010

சித்தர் காப்பு .....

"முக்தி கொண்டமோட்சமது மவுன  தீட்சை முனையறிந்து  செல்லுதற்கு வாலை காப்பு ; வெத்தி  கொண்ட நந்தீசர் பாதங் காப்பு ; வேதாந்தம் மூவாயிரம்  திருமூலர் பாதங் காப்பு ; அட்டமா சித்திக்கும் அகத்தியன் பாதங் காப்பு ; அன்பே உருவாக்கும் அகப்பேய் பாதங் காப்பு ; பரம கயிலாய  குரு போகர் பாதங் காப்பு ; கொடுஞ்  சீற்றம் மாறிட கொங்கணவர் பாதங் காப்பு; சூழி முனை சூட்சும குரு சுந்தராணந்தர்  பாதங் காப்பு ; இகத்தில் கிரகம் வென்ற இடைக்காடர்  பாதங் காப்பு ; வரும் வாழ்நாள் சிறந்திட வால்மீகர்  பாதங் காப்பு ; மாயத்தை நீக்கிட மச்சமுனிவர்  பாதங் காப்பு ; முன் கர்மம் நீக்கி ஞானம் காட்டும் முனிகமலர்  பாதங் காப்பு ; காரியம் உணர்ந்து வெல்ல கருவூரார்  பாதங் காப்பு ; பாவங்கள் நீங்கிட யோகம் தந்த பதஞ்சலி  பாதங் காப்பு ; மனப்பாம்பை அடக்கிட பாம்பாட்டி  பாதங் காப்பு ; தன்னுடல் சிறக்க செடி தந்த தன்வந்திரி  பாதங் காப்பு ; காலம் அறிந்து வாழ ஞானம் தரும் காசிபர்  பாதங் காப்பு ; வெட்ட வெளியை உணர்த்திட்ட கடுவெளி சித்தர்  பாதங் காப்பு ; கொல்குணம் போக்கும் கோரக்கர்  பாதங் காப்பு ; பரத்தை அறிந்திட ஞானம் போதித்த புலஸ்தியர்  பாதங் காப்பு ; தேரா மருத்துவம் தெளிந்து உரைத்திட்ட தேரையர்  பாதங் காப்பு ; வான் உலகில் மனு வாழ சிவவாக்கியர்  பாதங் காப்பு ; போகத்தை துறந்திட புகழ் ஞானம் தந்த புண்ணாக்கீசர்   பாதங் காப்பு ; நல் ஞான ஜோதியை நலமாய் கூறிய நற்குதம்பை பாதங் காப்பு ; அறியாமை இருள் நீக்கிய அமலன் அழுகுண்ணி பாதங் காப்பு ; பூஜா , ஞானம் புகன்றிட்ட புலிப்பாணி பாதங் காப்பு ; காலம் கடந்து வாழ கலை கூறிய காகபுஜண்டர் பாதங் காப்பு ; கர்மம் நீக்கி காலனை வென்றிட காலங்கி பாதங் காப்பு ; காப்பான கருவூரார் , போக நாதர் கருணையுள்ள அகத்தீசர் , சட்டைநாதர் மூப்பான கொங்கணரும் பிரம்ம சித்தர் முக்கியமாய் மச்சமுனி , நந்திதேவர் கோப்பான கோரக்கர் , பதஞ்சலியார் கூர்மையுள்ள இடைக்காடர் சண்டிகேசர் வாப்பான வாதத்திற்கு ஆதியான வாசமுனி கமலமுனி காப்புதானே ". 

Sunday, August 29, 2010

"அலங்கார ஆன்மீகத்திற்கு" சிவவாக்கியரின் சாட்டை அடி

"கல்லு கட்டை சாணி மண்ணு காராயந்தூர செம்பில்
     கொல்லன் வார்த்துரு வமைத்த கோயினுட் சிலைகளை
மல்லுகட்டாய்க் கட்டி மகோத்சவம் செய்த  போதினும்
    இல்லையே கதிபெறவும்  ஏமனுப் பிணங்களே " 

"திருத்தலம் திருப்பணி திருவிழாவும் செய்திட
      ஒருத்தர் நற்கதி பெறவும் உள்ளதோ சொல்லெங்கினும்
வருத்தமின்றி  ஏழைகட்கு  மாதுலர் பரங்கட்கும்
     பெருத்தவன் அன்னதானம் செய்யப் பேருலகை அடைவாரே".

அண்ட வெளி வணக்கம்

வான்வாழி வானையளி  மாதவரும்  வாழி
கோன்வாழிகுரு வாழிகுவலயத்தோர் வாழி
ஆன் வாழி அமரர் முத லிருடி  சித்தர் வாழி
நான்  நீயென லகற்று நாதாக்கள் வாழியவே

                             நன்றி:  திரு.சித்தர்தாசன் சுப்ரமணியன் சுந்தர்ஜி அய்யா அவர்கள்
                                          திரு .அகத்தியர்தாசன்  கேசவமூர்த்தி அய்யா அவர்கள்