Thursday, February 3, 2011

"பன்றியாகப் பிறப்பவர் யார் எனல்"

பாடல்:
"கொன்றி லாரைக் கொலச்சொலிக் கூறினார்
தின்றி லாரைத் தினச்சொலித் தெண்டித்தார்
பன்றி யாப்படி  யில்பிறந்த தேழ்நரகு 
ஒன்று வார்அரன் ஆணைஇது உண்மையே".

விளக்கம்:
கொல்லும் தன்மை இல்லாதவர்களைக் கொல்லும்படி சொல்லித் தூண்டினவர்களும் , புலால் புசியாதவர்களைப் புசிக்குமாறு சொல்லி வற்புறுத்தித் தின்னுமாறு  செய்தவர்களும் , பூமியில் பன்றியாகப்பிறந்து , பின்  ஏழ்
நரகத்திலும் போய்ச் சேர்வர். 
இது சிவபெருமான் ஆணையாகும், இது சத்தியம் .
மலம் தின்னும் இயல்புடையது பன்றி.ஆதலின் அதன் பிறப்பு இழியுடைதாயிற்று. அந்த இழி பிறப்புத் தீயவர்கட்கு ஏற்படும் என்பார். பன்றியாகப் படியில் பிறப்பார் என்றனர். பிறக்க வைப்பது இறைவனே ஆதலின் அரன் ஆணை என்றனர்.
                                                                     "திருமூலர்" 



3 comments:

  1. நண்பா,

    இந்த பாடலின் மூலம் மாமிசம் உண்ணக்கூடாது என்று திருமூலர் அருமையாக கூறிருக்கிறார். அதுவும் "இது சிவபெருமான் ஆணையாகும்" என்று கூறி இருக்கிறார்.

    அருமை அருமை , ஆயினும் அந்த சிவபெருமானே "பன்றி மாமிசத்தை பக்தனுக்காக சாப்பிட்டதாக (கண்ணப்பநாயனார்) கதை உண்டு".



    "கொல்லா நோன்பு தான் உலகில் சிறந்த நோன்பாகும்".

    நண்பரே இதைப்படிக்கும் அனைவரும் கூடிய விரைவில் இங்கு கூறப்பட்ட மூலத்தை புரிந்து கொண்டு வாழ்ந்தால் போதும்.

    என்றும்-சிவனடிமை-பாலா-சென்னை.

    ReplyDelete
  2. bala,
    "Fish oil" is used by siddhars in siddha medicine.
    To get "Fish Oil" you have to kill Fish.

    Many saints used "Tiger Skin" or "deer skin" to sit.To get Tiger/deer skin, one have to kill Tiger/deer.

    Moreover humans are practiced with non-veg foods before getting into cultivating vegetables and Rice.

    In the earth we can't get vegetarian food in all the times in all regions.

    "கொன்றி லாரைக் கொலச்சொலிக் கூறினார்
    தின்றி லாரைத் தினச்சொலித் தெண்டித்தார்"

    "கொல்லும் தன்மை இல்லாதவர்களைக் கொல்லும்படி சொல்லித் தூண்டினவர்களும் , புலால் புசியாதவர்களைப் புசிக்குமாறு சொல்லி வற்புறுத்தித் தின்னுமாறு செய்தவர்களும்"


    Here also thirumular never said "Do not eat Non-Veg foods".

    Here meaning suppose to be
    Do not let the Person who is not practiced killing earlier.
    Do not let the Person who is not practiced eating earlier.

    ReplyDelete
  3. அன்பு நண்பா ஜெயகுமார் ,

    தங்களின் பதிவூட்டதில் எமக்கு விளைந்த கருத்துகள்.

    "Fish oil" is used by siddhars in siddha medicine.
    To get "Fish Oil" you have to kill Fish.
    ---சித்த வைத்தியம் செய்த எல்லர்களும் சித்தர்கள் அல்ல .இங்கு கூறபடுவது ஞானத்தை தேடி அலைபவர்களுக்கு மட்டும்.

    Many saints used "Tiger Skin" or "deer skin" to sit.To get Tiger/deer skin, one have to kill Tiger/deer.

    ---எந்தவொரு சித்தனும் பிற உயிரை கொன்று தான் உயிர் வாழ மாட்டான்.

    அவர்கள் பயன்படுத்தும் மான் தோல்,புலித்தோல் அவர்களால் கொல்லப்பட்ட மிருகங்களாக இருக்க வாய்ப்பு இல்லை . தானாகவே இறந்த விலங்கின் தோள்களை தான் அவர்கள் பயன்படுத்கிறார்கள். பொதுவாக வயதான இறந்த உயிரின் தோள்களை தான் பயன்படுத்துவார்கள்.

    Moreover humans are practiced with non-veg foods before getting into cultivating vegetables and Rice.
    --இந்த கருத்தை நான் ஏற்றுக்கொள்கிறேன் . விவசாயம் செய்வதற்கு முன்பு நமக்கு உணவு என்பது காய் கனிகள் தான் உயிரினங்கள் அல்ல. இருந்தாலும் விவசாயம் தெரிந்த பிறகும் பிற உயிரை கொன்று உயிர் வாழலாமா?

    In the earth we can't get vegetarian food in all the times in all regions.

    --கிடைக்கும் இடத்தில் கிடைக்கும் உணவை உண்டு வாழ்ந்தாலே போதும். உணவு என்பது உடலுக்கு தான் ஆன்மாக்கு அல்ல , தட்ப வெப்ப சூழ்நிலைக்கு ஏற்றாற்போல் வாழ கற்றுகொண்டால் போதும். நாம் வசிக்கும் இந்தியா சைவ உணவிற்கு ஏற்ற பகுதி என்பது எனது கருத்து.



    "கொல்லும் தன்மை இல்லாதவர்களைக் கொல்லும்படி சொல்லித் தூண்டினவர்களும் , புலால் புசியாதவர்களைப் புசிக்குமாறு சொல்லி வற்புறுத்தித் தின்னுமாறு செய்தவர்களும்"
    --இப்பாடலில் தங்களின் கருத்து உங்களுக்கு சரியாக பொருந்தும். ஆனால் இங்கு கவனிக்கப்படவேண்டியவை

    "ஒருவனுக்கு கொலை செய்ய தெரியாது என்றும் அவனை கொலை செய்ய தூண்டும் மனிதர்களுக்கும் "



    "புலால் உண்ண தெரியாதவனை உண்ண சொல்லி வற்புறுத்துவதும்"


    " கொலை செய்ய சொல்வதற்கு சமம் புலால் உண்பது"-

    ...மேற்கூறிய இரண்டு கருத்துகளும் ஒன்று தான் என்று தான் திருமூலர் கூறுகிறார்.


    என்றும்-சிவனடிமை-பாலா-சென்னை.

    ReplyDelete